கணபதி அறக்கட்டளை நிறுவனத்தின் ஆசிரிய, மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு
கணபதி அறக்கட்டளை நிறுவனத்தால் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களான திருமதி.மகாசாந்தி திரிபுவனநாதன், செல்வி. தங்கவேலாயும் மஞ்சுளா ஆகியோருக்கான கெளரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கணபதி அறக்கட்டளை க.கணேசலிங்கம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அல்வாய் தெற்கு மாலைசந்தை கணபதி அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக திரு.இருதய கல்லூரி அதிபர் கி.ஸ்ரீஸ்கந்தராசா, தேவரையாளி இந்துக் கல்லூரி அதிபர் ச.செல்வானந்தன், ஆசிரியர்களான திருமதி. லோகேஸ்வரி ஸ்ரீகுமரன், திருமதி. இலங்கேஸ்வரி இராசதுரை ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.