Sat. Feb 15th, 2025

கணபதி அறக்கட்டளையின் 4ம் ஆண்டு நிறைவு விழா இன்று சிறப்புற நடைபெற்றது

கணபதி அறக்கட்டளையின் 4ம் ஆண்டு நிறைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைசந்தை வரதராஜ விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு மலையகம் ஆகிய பகுதிகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட 1380  மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கப்பட்டதுடன்  தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணனியும் வழங்கிவைக்கப்பட்டன.
இதேவேளை  2024 ஆண்டில் கல்வி மருத்துவம், வாழ்வாதார உதவி என இரண்டு கோடியே 80 இலட்சம் பெறுமதியான உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு கணபதி அறக்கட்டளையின் இயக்குநரும் நிர்வாகியுமான கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாகப்பர் கந்ததாசன், சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி சத்தியரூபன் சூரிகா, வடமராட்சி வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி லதர்ஷன் ஜனனி, பப்புவா நியூகினியா பட்டயக் கணக்காளர் வேலாயுதம் சிவரூபன், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் பரராஜசிங்கம் ஸர்மிலன் ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக கிறீன் சோலர் கோல்டிங் லங்கா பிரைவேட் லிமிடெட் முகாமையாளர் உ.கோகுலன், தி/மு/கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் பா.கோணேஸ்வரராஜா, அல்வாய் கிராம அலுவலர் ச.அருண்காந்தி ஆகியோரும் கணபதி அறக்கட்டளைகள் நிறுவன நிர்வாகிகள், பயனாளிகள், பிரதேச செயலகங்களின் உத்தியோகஸ்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்