கட்டுநாயக்க வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கவேண்டிய இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பபட்டன. கத்தார் விமான சேவையின் A 320 விமானம் ஒன்று இன்று அதிகாலை 2.45 மணியளவில் இறங்குவதற்கு இருந்த நிலையில் இதை மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு 3.22 மணியளவில் தரையிறங்கியது . இதே போல் ஏர் அரேபியா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் மத்தள விமான நிலையத்தில் காலை 3.32 மணியளவில் தரையிறங்கியது.
பின்னர் காலநிலை சீராகியதன் பின்னர் இந்த இரு விமானங்களும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது காலை 5.00 மணியளவில் தரையிறங்கின என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன