கட்டாரிலிருந்து ஈஸ்டர் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டதா? -கைதானவரிடம் இருந்து திடுக்கிடும் தகவல்-
ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராக கருதப்படும் ஒருவர் கட்டார் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் எனும் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவர்.
கைது செய்ப்பட்டவர் சி.ஐ.டி. பொறுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
தேசிய தௌஹீத் ஜமா அத் முக்கிய உறுப்பினர் பஸ்{ஹல் சஹ்ரானும் குறித்த சந்தேக நபரும் கட்டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இத்தகவல்கள் அனைத்தும் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.