கட்சியின் வேட்பாளரை அறிவித்த பின்பே கூட்டணி பற்றிய முடிவு -அமைச்சர் சஜித்

கட்சியின் வேட்பாளரை அறிவித்த பின்பே ,ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் அதன் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்தார்.
கூட்டணி அமைக்கவேண்டும் என்பதில் எனக்கு 1000% விகிதம் உடன்பாடு உண்டு.ஆனால் பெரும்பான்மையான பாரளுமன்ற உறுப்பினர்களின் விருப்பப்படி கட்சியின் வேட்பாளரை அறிவித்த பின்பே இது உருவாக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். எனது தனிப்பட்ட விருப்பம் கூட அப்படியே தான் இருக்கிறது என்றார். அப்படி செய்தால் தான் வெற்றியை நோக்கிய ஒரு பொருத்தமான கூட்டணியை உருவாக்கமுடியும் என்று கூறினார்