கட்சியின் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை-அமைச்சர் அகில விராஜ்
பதுளையில் இடம்பெறும் கூட்டத்தில் கட்சியின் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசாவை வரவேற்பதற்காக பிரமாண்டமான முறையில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் ஒழுங்கு செய்யப்படட இந்த கூட்டத்தில் , சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் பல ஐக்கிய தேசிய கடசியின் சஜித் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் MP கள் இதே மாதிரியான கருத்தை வெளியிட்டு இருந்தார்கள்
நாங்கள் எந்த விதமான நிகழ்ச்சி ஒழுங்கமைப்பையும் எதிர்க்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கடசியின் நடத்தை விதிமுறைகள் உரியவகையில் பேணப்படவேண்டும் என்று பொது செயலாளர் அகில விராஜ் கூறினார்.