கடும் தொனியில் பதில் அறிக்கை வெளியிட்ட இலங்கை

புதிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவியேற்புக்கு எதிராக அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல அமைப்புகள் வெளியிட்ட கண்டங்கள் மற்றும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் கடும்தொனியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது..
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இது ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் தலைவரால் மேற்கொள்ள பட்ட முடிவு என்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அமைப்புகள் இத்தகைய உள்ளக விவகாரங்களில் தலையிடுவதோ விரும்பத்தகாதது மட்டுமன்றி ஏற்றுக் கொள்ளப்படதக்கதும் அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
சர்வதேச அமைப்புகளும் மற்றும் வெளிநாடுகளும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பதவியை விமர்சிப்பது மிகவும் வருந்ததக்கதுடன், இயற்கையான நீதி கோட்ப்பாடுகளுக்கும் எதிரானது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது