கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தவா் கைது, தீவிர விசாரணை பிாிவில்.

தமிழகம் இராமேஸ்வரத்திற்கு கடல்வழியாக நுழைந்த வவுனியா இளைஞா் ஒருவா் இந்திய பொலிஸாாினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றாா்.
வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.