Mon. Oct 7th, 2024

கடற்றொழிலாளா்களுக்கு எச்சாிக்கை..! இந்த பகுதிகளில் கடற்றொழிலுக்கு செல்லவேண்டாம்.

சீரற்ற காலநிலை காரணமாக மன்னாா், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, பொத்துவில், கொழும்பு, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சாிக்கப்பட்டுள்ளனா்.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சாிக்கையினை விடுத்திருக்கின்றது. இதன்படி நாளை கா லை 8 மணி தொடக்கம் நாளை மறுதினம் காலை 8.30 வரை இந்த எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை தென்மேற்கு மற்றும் தென் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் கடற்பகுதி கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக கல்முனை வரையான கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை

ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில்

கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை

அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக் கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும்

இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்