கடற்தொழிலாளர்கள் வேண்டுகோள்
கடற்தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தொண்டைமானாறு கடற்தொழிற் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மீன் ஏற்மதிகள் இல்லாத காரணத்தால் மீனவர்களின் தொழில் பாதிப்படைந்துள்ளது. ஊரில் மீன் விற்பனைக்கா தொழிலுக்கு சென்ற போதும் அதனைச் சந்தைப்படுத்துவதற்கான சரியான விலை இல்லாததால் மீன் தேக்கமடைகிறது. இதனால் ஒரிரு கடற் தொழிலாளர்களே கடற்தொழில் ஈடுபடக் கூடியதாக உள்ளது. அரசு கொரோனாவால் பாதிப்படைந்த வருமானத்தை இழந்தவர்களுக்கே நிவாரணம் வழங்குகிறது. ஆனால் அன்றாட வருமானத்தை நம்பி இருந்த கடற்தொழிலாளர்கள் குடும்பங்களை பற்றி அரசோ அல்லது எந்த அமைப்புக்களுமோ கருத்தில் கொள்வதாக இல்லை. எனவே இது தொடர்பாக உரியவர்கள் கவனமெடுத்து கடற் தொழிலாளர்களுக்கு உதவுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.