Thu. Apr 24th, 2025

கடன் தொல்லையர்களினால் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழ் அரியாலை புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் புகையிரதம் முன் பாய்ந்து திலீபன் ஈழபிரியா வயது (27) இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் நெடுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதிக கடன் காரணமாக கணவன் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தற்போது தங்கியிருந்த நிலையில் கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்