ஓல்கோட்ஸ் அணியை வீழ்த்தி காட்லிஸ் அரையிறுதியில்.
பிரதீபனின் அதிரடி சதம், ரஜீவனின் துல்லியமான பந்துவீச்சில் ஓல்கோட்ஸ் அணியை வீழ்த்தி காட்லிஸ் அரையிறுதியில்.
இலங்கை துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்படுகின்றன பிரிவு 3 இற்கான யாழ்மாவட்ட அணிகளுக்கு இடையிலான காலிறுதியாட்டத்தில் பருத்தித்துறை காட்லி அணி தவராசா பிரதீபின் சதத்தினால் 115 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை ஓல்கோட்ஸ் அணியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்று சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் பருத்தித்துறை காட்லிஸ் அணியை எதிர்த்து வட்டுக்கோட்டை ஓல்கோட்ஸ் அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வென்ற காட்லிஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதல் ஆறு இலக்குகளை 80 ஓட்டத்திற்கு இழந்து இக்கட்டான நிலையில் தடுமாறியது காட்லிஸ் அணி. இருப்பினும் பீரதீப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை தொட்டார். பிரதீப் , இராகவன் இணைப்பாட்டம் 135 ஓட்டங்களைப் பெற 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஓல்கோல்ட்ஸ்
பிரியலக்ஷன் 1 சித்துஜன் 03 திலீபன் 2 இலக்குகளை கைப்பற்றினர்
240 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஓல்கோட்ஸ் அணியினர் ரஜீவனின் பந்து வீச்சில் தடுமாற்றம் அடைந்து முக்கிய 05 இலக்குகளை 21 ஓட்டங்களுக்குள் இழந்தது .சிறிகுகன் சிந்து இணைப்பாட்டம் நிலைத்திருந்து ஆடினாலும் 33 ஓவர்களில் 124 ஓட்டத்திற்கு அனைத்து இலக்கினையும் இழந்து 115 ஓட்டத்தால் தோல்வியடைந்தது . அவ்வணி சார்பில் அதிகபட்சமாக
சிறிகுகன் 43,சிந்துஜன் 13,திலீபன் 17
பந்து வீச்சில் காட்லிஸ் அணி சார்பில் ரஜீவன் 4, சாகித்தியன் 3, தினோஷன் 2 பிரதீப் 1 இலக்குகளை கைப்பற்றினர்.