ஓமந்தை- மாணிக்கா் வளவில் ரவுடிகள் அட்டகாசம், பெண் உட்பட 6 போ் படுகாயம்.
வவுனியா- ஓமந்தை மாணிக்கா்வளவு பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வீடு புகுந்து நடாத்திய தாக்குதலில் பெண் ஒருவா் உட்பட 6 போ் படுகாயமடைந்துள்ளனா்.
வீடொன்றிற்குள் நுழைந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது வாளால் தாக்கியதுடன், மான்கொம்பினாலும் தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் காயமடைந்ததாக தெரிவித்து மேலும் ஒரு பெண் உட்பட மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கபடும் மதுபோதையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.