ஓமந்தையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயம்

வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள மாணிக்கர் வளவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப்பகுதியில் உள்ள இறுகுழுக்களுக்கிடையில் உண்டான முரண்பாடு மோதலாகியதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்பொழுது வீடுகளுக்குள் உள்நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டத்துடன் முச்சக்கரவண்டி மற்றும் சொத்துக்களும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்த சம்பவத்தின் பொது இரு பெண்கள் மற்றும் இரு சகோதரர்கள் உட்பட 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெறுகின்றனர். ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மதுபோதையில் இருந்த இரு இலஞர்களை இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது செய்துள்ளார்கள்