Sat. May 16th, 2026

ஒரு வருடத்தில் தீா்வு. நம்பினால் நம்புங்கள்..

கிடப்பில் போடப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்பு முயற்சிகளை மீளவும் தொடங்கி ஒரு வருடத்தில் இனப்பிர ச்சினைக்கு தீா்வினை காண்பேன் என கூட்டமைப்புக்கு பிரதமா் உத்தரவாதம் வழங்கியுள்ளாராம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங் கவுக்கும் இடையில் இன்று மாலை நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே

பிரதமா் இந்த உத்தர வாதத்தை வழங்கியிருப்பதாக அறிய கூடியதாக இருக்கின்றது.  இன்றைய சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். மாலை 3.30 மணியளவில் சந்திப்பு ஆரம்பித்தது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவே உங்களிற்கு அழைப்பு விடுத்தேன். என பிரதமர் பேச்சை ஆரம்பித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள்

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இழுபடுகின்றன. கடந்த ஐந்து வருடத்திலும் அது தீர்க்கப்படவில்லை.  அடுத்த ஜனாதிபதி தேர்தலும் வந்து விட்டது. இதில் உங்கள் கட்சியிலேயே இன்னும் ஒற்றுமை யேற்படவில்லை.

உங்கள் கட்சியிலிருந்தே மூன்று வேட்பாளர்கள் எங்களுடன் கதைத்து விட்டார்கள். முதலில், யார் வேட்பாளர் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

அதைத்தான் முதலில் செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களுடனும் நாம் பேச்சு நடத்துவோம். தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தீர்க்க அதிகபட்ச தீர்வு திட்டத்தை

நடைமுறைப்படுத்துவதாக யார் நம்பிக்கையளிக்கிறார்களோ அவர்களிற்கே எமது ஆதரவு. அதற்காக அனைவருடனும் பேசிய பின்னரே தீர்மானம் எடுப்போம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதன்போது  அரசியல் தீர்விற்காக புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்பட்டது, அபிவிருத்தியில் கூட்டமைப்பை பங்காளியாக்கியது

உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது எதிர்காலத்திலும் தொடரும் என பிரதமா் கூறியுள்ளாா். அத்துடன், தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால்,

அடுத்த ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை முடித்து,  இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என வாக்களித்தார் என நம்பகரமாக அறியப்படுகிறது.

இதேவேளை, கல்முனை விவகாரத்தில் வாக்களித்தபடி ரணில் நடந்து கொள்ளவில்லையென்பதை கூட்டமைப்பு எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, பூர்வீகமாக குடியிருக்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு ரணிலும் துணையாக இருக்கிறார் என காரசாரமாக  குற்றம்சுமத்தினர் கூட்டமைப்பு எம்.பிக்கள்.இந்த குற்றச்சாட்டை அவசரமாக மறுத்த ரணில்,

கல்முனை விரைவில் தரமுயரும் என மீண்டும் ஒரு வாக்குறுதியளித்தார். எல்லை மீள்நிர்ணய பணிகள் நடந்து வருவதாகவும், கல்முனையை தரமுயர்த்தும் அமைச்சரவை

பத்திரம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ரணில் தெரிவித்தார்.

சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. தமது அரசியல், பொருளாதார நகர்வுகள்  பற்றி கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு ஏற்கனவே விரிவாக பேசியதாக குறிப்பிட்ட ரணில்,

இவை பற்றி இனியும் விலாவாரியாக பேச வேண்டியதில்லையென்றும், மீண்டுமொருமுறை கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டு சந்திப்பை முடித்ததாக தகவல்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed