ஒருவருடத்தில் அரசியல் தீர்வு , நான்கு வருடம் ஆட்சியில் இருந்தபின், கூட்டமைப்பிடம் உறுதி அளித்த ரணில்
புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்து அரசியல் தீர்வை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த நான்கரை வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய உள் விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது எனவும் நீண்ட காலமாக தொடர்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் யாப்பினை புதிதாக உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் வேட்பாளர் ஒருவருக்கே தமது ஆதரவு வழங்கப்படும் என்று கூறினார் .
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன