ஒப்படைத்த பிள்ளைகளை தா..! ஓமந்தை கண்ணீரால் நிரம்பியது.
பன்றிக்கெய்த குளம் தொடக்கம் ஓமந்தை சோதனை சாவடி வரையில் பாாிய கவனயீா்ப்பு ஊா்வலம் ஒன்றை நடாத்தியிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்,
ஓமந்தை இராணுவ சோதனை சாவடி முன்பாக பாாிய கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளனா். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சா்வதேச தினமான இன்று,
வடகிழக்கு மாகாணங்களில் பாாியளவிலான போராட்டங்கள் நடாத்தப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக வட க்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்
இறுதிப்போா் காலப்பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உற வுகளுக்கு என்ன ஆனது? என்பதை வெளிப்படுத்தகோாி இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா்.
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கண்ணீருடன் உறவுகள் இந்த போராட்டத்தை நடாத்தியிருந்தனா்.