Sun. Sep 15th, 2024

ஒட்டுசுட்டான்- அம்பகாமத்தில் இராணுவ உடையில் வந்த காவாலிகள் அட்டகாசம்..! மக்கள் மீது துப்பாக்கி சூடு, தாக்குதல்..

ஒட்டுசுட்டான்- அம்பகாமம் பகுதியில் கனரக வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த 4 போ் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதுடன், கனரக வாகனத்தின் சாரதியை சிறைப்பிடித்து மூா்க்கத்தனமாக தாக்கியுள்ளனா்.

குறித்த பகுதியில் மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற 4 இராணுவத்தினர் தாக்க முற்பட்ட வேளையில் அங்கு மணல் ஏற்றிய மூன்று பேர் தப்பியோட முயற்சித்துள்ளனர் இந்நிலையில் வாகன சாரதியை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். தெய்வாதீனமாக துப்பாக்கி ரவைகள் அவர்மீது படவில்லை

ஏனையவர்கள் தப்பிச் செல்ல வாகன சாரதியை சிறைப் பிடித்த ராணுவத்தினர் அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு முதுகுப் பக்கத்தில் ராணுவ துப்பாக்கியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தத்தை கேட்ட மக்கள்

குறித்த பகுதியில் ஒன்றுகூடி அந்த இடத்தில் இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோரை அழைத்து தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர்களை அந்த இடத்துக்கு கொண்டு வருமாறு கூறி மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தில் நின்ற போதும்

அவர்களை அந்த இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு வர மறுத்ததோடு பொலிசாரும் அவர்களை கைது செய்ய மறுத்திருந்தனர் இந்நிலையில் காயமடைந்தவர்1990 அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த இடத்தில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரை கைது செய்யுமாறு கோரிய போதும் பொலிசார் இதுவரை கைது செய்யாத நிலையில் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் வந்து இராணுவத்தை கைது செய்யும் வரை அந்த இடத்திலிருந்து

அகல மாட்டோம் எனக்கூறி உட்காா்ந்து போராட்டம் நடத்தினா். எனினும் அது நடக்கவில்லை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்