ஐ.தே.க.வுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டமைப்பு!! -அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் திணறும் பரிதாபம்: சாடுகிறார் கோத்தபாய
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். இருப்பினும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்; அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
திடீர் சந்திப்பினை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தனிடமே கோத்தாபய மேற்படி விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய” என்று கோத்தாபய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.