ஐஸ் போதை பொருளுடன் இந்திய பிரஜை கைது!! -86 லட்சம் பெறுமதியான ஜஸ் மீட்பு-

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 86 லட்சத்து 42 ஆயித்துக்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளை கடந்திவந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை சென்னை நகரில் இருந்து இலங்கை வந்த 29 வயது மதிக்கத்தக்க நபரே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பயண பொதியில் இருந்து 864 கிராம் ஐஸ் ரக போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.