ஐந்து தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உறுப்புரிமை பறிப்பு -சுதந்திர கட்சி அதிரடி நடவடிக்கை
இலங்கை சுதந்திர கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு நல்கியதால் 5 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான 5 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கான குற்றச்சாட்டுப் பத்திரங்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.
கட்சியின் ஒழுக்கத்திற்கு எதிராகவும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார் .
இலங்கை சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா, ஏ.எச்.எம் பௌசி,அபேவர்தன மற்றும் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகிய 5 பேரின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஐந்து பேரினதும் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.