ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள சிறுபான்மை கட்சிகளுடன் நாளை சஜித் பேச்சுவார்த்தை
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சித்தலைவர்களுடன், அமைச்சர் சஜித் பிரேமதாச நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரான அமைச்சர் மனோ கணசேன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைரான அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக தகவல்கள் வெளிவந்திருந்தன . இதன் தொடர்ச்சியாகவே ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை , சஜித் பிரேமதாஸ நாளை சந்திக்க உள்ளார் எனத் அறியப்படுகிறது . இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பு குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இருந்த போதிலும் மிக விரைவில் சந்திப்பு இடம்பெறும் என்று தகவல்கள் வெளிவருகின்றன