ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டம் அலரி மாளிகையில் இன்று, சூடு பிடிக்கப்போகும் வேட்பாளர் பிரச்சினை
இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. அலரி மாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் வேட்பாளர் தெரிவே முக்கிய விடயமாக எடுத்துக்கொள்ள படவுள்ளது.
தேர்தல் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் இன்று சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என்று பிரதமர் ரணில் தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் நேற்றைய தினம் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது