ஐக்கிய தேசிய கட்சி MP களுக்கு இன்று அலரி மாளிகையில் இரவு விருந்து,சஜித்தின் கூட்டத்தை குழப்பும் முயற்சி ?
ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் இரவு விருந்துக்கு அலரி மாளிகைக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதே நேரம் இன்றயதினம் 3 மணியளவில், அமைச்சர் சஜித் பிரேமதாச தன்னை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவதை முன்னிறுத்தி பாரிய ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் MPகளை தடுப்பதற்காகவே இந்த இரவு விருந்து ஒழுங்கு செய்யப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.