ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் தெரிவு நிறைவு – அமைச்சர் மனோ
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் நேற்று (31) ஊடகவியலாளர்களுடன் பேசும்பொழுது இதனை குறிப்பிட்டார்
தேர்தலுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஐக்கியதேசிய கட்சிக்கு வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை தற்பொழுது இல்லை. மற்ற கட்சிகள் அறிவித்ததற்காக ஐக்கிய தேசிய கட்சியும் உண்டானடியாக அறிவிக்க வேண்டும் என்பதில்லை. மற்ற காட்சிகள் என்ன அவசரத்தில் வெளியிட்டார்களோ அது அவர்களுக்கு தான் தெரியும்.
நான் எதிர்க்கட்சியிடம் சொல்லவேண்டியது என்ன என்றால், நாங்கள் எங்கள் பயணத்தில் செல்வோம், நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை .
நாங்கள் ஏற்கனவே ஒரு வேட்பாளரைப் பற்றி விவாதித்து முடிவு செய்துள்ளோம். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை காத்திருங்கள் என்று அமைச்சர் கூறினார்