ஏ9 வீதி கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

ஏ9 வீதி கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற அரச பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கனகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் குமரேசன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கி புறப்பட்ட அரச பேரூந்து ஏ9 வீதியூடாக கிளிநொச்சி நகர் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.