Mon. Aug 10th, 2026

ஏ9 வீதியில் டிப்பர், கனரக வாகனங்கள் போக்குவரத்து கட்டுப்பாடு

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் டிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

விதிப்பது என கடந்த 30 ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று (03) கிளிநொச்சி நகர்பகுதியில் டிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பொலீஸாரால் அறிவுறுத்தல்

வழங்கப்பட்டுள்ளது.

 

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் வீதி விபத்துக்களை தடுத்துல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தல்

தொடர்பான கலந்துரையாடலின் போது பாடசாலைகள் ஆரம்பித்தல் நிறைவுறும் நேரத்தை கருத்தில் எடுத்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக காலை

ஏழு மணி தொடக்கம் எட்டு மணிவரைக்கும் பின்னர் பகல் ஒரு மணி தொடக்கம் இரண்டு மணி வரைக்கும் இரணைமடு சந்தி மற்றும் பரந்தன் சந்திக்கு

இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் டிப்பர் வாகனம் உட்பட கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

 

இதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர தெரிவித்திருந்தார்.

இதற்கு அமைவாக நேற்றைய தினம் டிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed