Thu. Mar 20th, 2025

ஏ9 கொடிகாமம் வீதியில் விபத்து பலர் காயம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியதில் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் மோதியே குறித்த விபத்து இன்று மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் பயணித்த 3 மாணவர்கள், சாரதி உட்பட 9 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்