ஏப்ரல் 17 ஆம் திகதியே குடியுரிமையை இரத்து செய்து விட்டேன்-கோத்தபாய, வழமையாக பெயர்கள் வெளியிட காலதாமதம் ஏற்படும்-அமெரிக்க தூதுவர்
கோத்தபாய இன்றயதினம் தனது குடியுரிமையை இரத்து செய்தமையை மீண்டும் உறுதி செய்தார். உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கோத்தபாய இதனை தெரிவித்தார். தான் ஏப்ரல் 17 ஆம் திகதியே இதனை இரத்து செய்திவிட்டதாகவும் இலங்கை குடிவரவு திணைக்களத்தில் இருந்து நான் இலங்கை பிரஜை என்பதை உறுதிபடுத்தும் வகையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்தவாரம் பத்திரிகையாளர்களிடம் பேசிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், சிலரது பெயர்கள் பதிவு செய்து வெளிவர காலம் எடுக்கும் என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது தெரிவித்தார். இதன் மூலம் கோத்தபாய இன்னமும் குடியுரிமை இரத்து செய்தமைக்கான உறுதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை அமெரிக்க தூதுவர் உறுதி செய்திருந்தார். இதனால் குடியுரிமை இரத்து செய்தமைக்கான பத்திரத்தை குடிவரவு திணைக்களத்துக்கு சமர்பிக்காமலே பெற்றுள்ளார் என்பது வெளிப்டையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது .