ஏதிர்ப்புக்கு மத்தியில் யாழிலும் காணாமல் போனோர் அலுவலகம்!!
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தமக்கு தேவை இல்லை என்று வெளிப்படையாக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையில் குறித்த அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்று எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிறுவவுள்ளது.
குறித்த அலுவலகமானது 124 ஆடியபாதம் வீதி, யாழப்பாணம் என்ற முகவரியில் திறக்கப்பட்டு தனது செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது.
காணமால் ஆக்கப்பட்டோருக்கான அலுலகமானது தற்போது மாத்தறை மற்றும் மன்னாரில் இயங்கி வரும் நிலையில் மூன்றாவது பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்த்தாபிக்கவுள்ளது.
பல்வேறு சூழ்நிலைகளில் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை குறித்த அலுவலகம் சேகரித்து வருகின்றது.
பிரதேச மட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளை குறித்த நிறுவனம் ஆராய்வுகளை மட்டும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.