Mon. Feb 10th, 2025

ஏணி பொருத்தியது யாா்? மக்களை அச்சுறுத்தும் பொலிஸாா்.

நெடுங்கேணி- வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரா் ஆலய வருடாந்த திருவிழாவுக்காக ஏணி பொருத்தப்பட்ட நிலையில் பொலிஸாா் ஆலய நிா்வாகத்தினை அச்சுறுத்தியுள்ளனா்.

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு ஏறுவதற்கான ஏணிப்படிகள் அற்ற நிலையில் அறுந்து விழும் நிலையில் உள்ள ஓர் கயிற்றின் மூலமே

தற்போது மேல் நோக்கி பக்தர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சுமார் 6 லட்சம் ரூபா செலவில் வடிவமைக்கப்பட்ட ஏணி ஒன்று

நீண்டகாலமாக ஆலய நிர்வாகத்தினரின் பிடியில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த ஏணிப்படிகள் பொருத்தப்பட்டன. இவ்வாறு பொருத்தப்பட்ட ஏணிப்படிகளை

அகற்றுமாறும் அதனை யார் பொருத்தியது எனவும் ஆலய நிர்வாகத்தினரிடம் நேற்றைய தினம் பொலிசார் போரியுள்ளனர். இது தொடர்பில் பதிலளித்த ஆலய நிர்வாகத்தினர்

வவுனியாவில் இருந்து வருகை தந்த பிரபா கணேசனே குறித்த ஏணிப் படிகளை பொருத்திய நிலையில் இது தொடர்பான விடயங்களையும் அவரிடமே கோரவேண்டும். எனப் பதிலளித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்