ஏக ஆதிக்கம் செலுத்தி கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி
கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மறைந்த வீரரர்கள் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டியில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் வடமராட்சி அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டிகள் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து வல்வெட்டித்துறை ஆதிசக்தி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி முதல் பாதியாட்டத்தில் அபி மற்றும் ஆர்த்திகன் ஒவ்வொரு கோல்களை பதிவு செய்ய 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்திலும் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியினரின் ஆதிக்கம் மேலோங்க அபி, ஆர்த்திகன் மற்றும் சர்மிலன் ஆகியோர் ஒவ்வொரு கோல்களை பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.