Wed. Mar 11th, 2026

எஸ்.மிதுன்ராஜ் புதிய சாதனையோடு இரு தங்கங்கள்

தேசிய இளைஞர் மன்றத்தால் நடாத்தப்பட்ட 34வது தேசிய மட்ட தடகள போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பருத்தித்துறையைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் தட்டெறிதலில் புதிய சாதனையைப் பதிவு செய்ததோடு இரு தங்கப்பதக்கங்களையும் சுவீகரித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 34 தேசிய மட்ட தடகள போட்டிகள் கடந்த 19ம் திகதி கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பருத்தித்துறையைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் 44.80 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தையும், குண்டு போடுதல் போட்டியில் 14.39 மீற்ரர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed