எலிஸ் மற்றும் டெப்லிட்ஸ் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்
இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலேனா பி டெப்லிட்ஸ் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளனர்.
இதேநேரம் இன்று காலை கம்போடியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.