Wed. Mar 11th, 2026

எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச ஊழியர்களும்,  அன்றாடகாச்சிகளும்,  சுயதொழிலாளர்களும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். சில எரிபொருள் நிலையங்கள் பொறுப்புடன் வரிசையில் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்து எரிபொருளை பகிர்ந்து வழங்கி வருகின்றன. ஆனால் சில எரிபொருள் நிலையங்கள் பொறுப்பற்ற வகையில்

வகை தொகையின்றி வழங்கி வரிசையில் நிற்பவர்களை உளநெருக்கீட்டிற்கும் கேலிக்கும் உள்ளாக்குகின்றனர். நீண்டவரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காமல் அன்றாட செயல்பாடுகளை செய்வதறியாது திகைக்கின்றனர். அதிலும் ஆசிரியர்களின் நிலை திண்டாட்டம் மாணவர்களின் நிலையோ கொண்டாட்டம் என்ற நிலை உருவாகி பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது கூலி வேலை செய்து அன்றாடம் எரிபொருளை நிரப்புவர்களின் நிலையும் திண்டாடி வருகின்ற போது பணம் வைத்திருப்பவர்கள் பதுக்குகிறார்கள். அத்துடன் கறுப்பு சந்தையில் விற்பனைக்கு விடுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு பிரதேச செயலகங்களுக்கு ஊடக அரச அதிபர் அனைவரும் எரிபொருளை பெறும் பொறிமுறையை உறுதிப்படுத்த வேண்டும். எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அரச அதிபரின் சுற்றறிக்கைக்கு காத்திருக்கின்றனர். விரைந்து நடவடிக்கை எடுத்தால் நடுத்தர வர்க்கத்தினரும் பொருளாதாரத்தில் அடிமட்ட மக்களும் பாதுகாக்கப்படுவர் எனத்தெரிவித்தார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed