எப்ப அந்த எண்ணம் வருமோ, அப்போ தான் திருமணம், சடடென்று சொன்ன டாப்சி

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி. சரியான வாய்ப்புகள் தமிழில் கிடைக்காததால் இந்தி பக்கம் சென்றவர் அங்கேயே செட்டில் ஆகியிருந்தார்இந்த நிலையில் தன மீண்டும் , தமிழில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் திரும்ப வந்துள்ளார் . தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்பை திரில்லர் படம் ஒன்றில் நடிக்கின்றார்
சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது காதல் குறித்து டாப்சி பேசியுள்ளார். ’எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை, ஆனால் நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ இல்லை. வீட்டில் திருமணம் பற்றிய நச்சரித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு இப்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை. ஆனால் எனக்கு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருமோ அப்போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன்.
திருமணத்தின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன் . எனது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் இடம்பெறும் .என்றும் அவர் கூறினார்