என்றென்றும் தமிழர்களின் இதயத்தில் இடம்பிடித்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நேற்று காலமானார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக கடுமையான சட்ட போராட்டம் நடத்திய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நேற்று காலமானார். இவர் வடமாநிலத்தவராக இருந்தபோதும் தமிழ்நாடுமீதும் தமிழர் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர். அண்மையில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் .
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரின் தூக்குத்தண்டனைக்கு எதிராக வாதாடி, . இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவதினால் இரத்து செய்யவைத்தவர் .
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் 2011ல் நிராகரித்தனால் அதே வருடம் செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டிருந்தது
இதற்கு எதிராக அவசரமாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்துவதுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரியும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் சார்பில் யார் ஆஜர் ஆவார் என்று தமிழகமே , என் உலகத்தமிழர்களே எதிர்பார்த்திருந்த வேளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூலம் அழைத்து வரப்பட்டார் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.. சென்னை ஹைகோர்ட்டில் ராம் ஜெத்மலானி முக்கிய வாதங்களை வைத்து அரசு வக்கீல்களை திக்குமுக்காட செய்தார்
அப்போதே தமிழர்களின் மனதில் தனி இடத்தை ராம் ஜெத்மலானி பிடித்துக்கொண்டார் . ராஜீவ் காந்தி கொலை வழக்கை பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகள் 1999 உடன் முடிவடைந்துவிட்ட நிலையில் அதை இப்போது தொடர்வது சரியாக இருக்காது. இவர்கள் அளித்த கருணை மனுக்கள் இவ்வளவு கால தாமதம் செய்து முடிவெடுப்பது சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது. அரசியல் சாசனதின் வழங்கப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது. இவர்கள் நீண்ட காலம் ஜெயிலில் இருந்துவிட்டனர். இப்படி திடீர் என்று தூக்கு கொடுப்பது அடிப்படை மனித உரிமையை மீறுவதாக அமையும் என்று வாதிட்டர்
11 ஆண்டு காலம் கால தாமதம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இவர்கள் இந்த நீண்ட காலத்தில் மனதளவிலும் உடலளவிலும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துள்ளதால இவர்களது தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வாதம் செய்தார்.
இந்த வாதம் உண்மையில் வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணைக்கு பின் மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததோடு கருணை மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கும் அனுப்பியது. பின்னர் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.
இதன் பின்னரும் இடம்பெற்ற தமிழக அரசின் விடுவிக்கும் முடிவுக்கு எதிராக மத்தியஅரசு தொடுத்த வழக்கிற்கு எதிராகவும் இவரே வாதாடி அதிலும் 7 பேரின் விடுதலைக்கு சார்பான தீர்ப்பையே இவரது வாத திறமையால் வென்றார்.
இப்படியாக இந்த 7 பேரின் விடிவுக்கு முன்னர் தனது மூச்சுக்காற்றை நிறுத்தி தமிழக தமிழர்களை மட்டுமல்லாமல் உலகத்தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றுவிட்டார்