என்னை ஒவ்வொரு அங்குலமாக பார்க்கத்துடித்த தமிழ் இயக்குனர்-நடிகை சுர்வீன் சாவ்லா

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதற்கு , தேசிய விருது பெற்ற பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மீ டு இயக்கத்தின் பின்னர் வெளியில் வர ஆரம்பித்துள்ளது. இந்த வரிசையில் இப்பொழுது சுர்வீன் சாவ்லாவும் இணைந்துள்ளார். எல்லா துறைகளிலும் பாலியல் தொல்லை இருந்த பொழுதிலும் திரைத்துறையில் இது அதிகமாகவுள்ளது .
படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோரை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் நடிகைகளுக்கு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பழக்கம், சமீபகாலமாக தான் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
. இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுர்வீன் சாவ்லா. இவர், தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒட்டுமொத்த இந்திய திரைத்யுலகத்தை அதிர வைத்துள்ளது. ஆடிசன்களின் போது பல இயக்குனர்கள் தன்னுடை முழு உடம்பையும் பார்க்க ஆசைப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தென்னிந்தியாவில் இப்படியான அனுபவம் மூன்று முறை ஏற்பட்டதாக சுர்வீன் தெரிவித்துள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னுடைய உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அறிய விரும்புகிறேன் என தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஆடிசனின் போது தனக்கு மிகவும் தொல்லை கொடுத்ததாக சுர்வீன் தெரிவித்துள்ளார். அடிக்கடி மும்பைக்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது விருப்பத்தை அவரது நண்பர் மூலம் தெரியப்படுத்தியதாகவும், ஆனால் அந்த வாய்ப்பை தான் மறுத்துவிட்டதாகவும் சுர்வீன் தெரிவித்துள்ளார்.