எதிர் வரும் வாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து SLFP மத்திய குழு முடிவு எடுக்கும்-மஹிந்தா அமரவீரா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியானது பொதுஜன பெரமுனாவுடன் இணைந்து செயல்படுமா என்ற முடிவு சுதந்திர கட்சியின் மத்திய குழுவால் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பொதுச் செயலாளர் எம்.பி. மஹிந்தா அமரவீரா தெரிவித்தார்.
இன்று சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டார் .
எதிர் வரும் வாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மத்திய குழு முடிவு எடுக்கும் என்று அமரவீரா மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், ஜனாதிபதி தேர்தலில் கோதபய ராஜபக்ஷவை ஆதரிக்க சுதந்திர கட்சி முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சரத் அமுனுகம இன்று தெரிவித்திருந்தார் .