எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான 50 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படும். – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தலையில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது தெரிவித்த அமைச்சர் , பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவு, எதிர்வரும் 10 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்துடன் இந்த 50 ரூபா கொடுப்பனவும் சேர்த்து வழங்கப்படும்.” என்றார்.
ஆனால், இந்த கொடுப்பனவு நிலுவைத்தொகையுடன் வழங்கப்படுமா என்பது தொடர்பில் அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஆகஸ்ட் மாத முடிவுக்குள் 50 ரூபா மேலதிக சம்பளம் வழங்கப்படும் ஏறும் இல்லாவிடில் தனது அமைச்சு பதவியை துறப்பேன் என்று அமைச்சர் திகாம்பரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
எனினும், குஸ்தி மாத முடிவுவரை எதுவித கொடுப்பனவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர் மனோ கணேசன் புதிய திகதியொன்றை அறிவித்துள்ளார்