Sun. Apr 12th, 2026

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அழகக நிலையங்கள் திறக்கப்படுவதோடு நேரக் கட்டுப்பாட்டிலும் தளர்வு

சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அழகக நிலையங்கள் திறக்கப்படும் என்பதோடு நாளை மறுதினம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ் மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் சித்திரை புதுவருடப் பிறப்பினை முன்னிட்டு அதற்கு முன்னர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (12/04/2026) அன்று வாடிக்கையாளர்களின் நலன் கருதி அழகக நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதோடு 11/12/13ம் திகதிகளில் நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்பதனையும் எமது அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed