Thu. Mar 20th, 2025

எதிர்வரும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்- சஜித், 25 ஆம் திகதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்- ரணில்

எதிர்வரும் ஓரிரு தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடி ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று மாலை அலரி மாளிகையில் இ்டம்பெற்றது. அதன் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரேமதாச, எதிர்வரும் ஓரிரு தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடி வேட்பாளர் தொடர்பில் ஆராயும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது இடம்பெற்றுவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களின் கூடத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க , எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்