ஊடகவியலாளர் ச.தவசீலன் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு!!
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – பனிக்கன்குளம் – மாங்குளம் பகுதியில் உள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பொலிஸார் விசாரணைக்கான அழைப்பு கடிதத்தை கையளித்துள்ளனர்.
குறித்த அழைப்பு கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் தங்களின் வாக்குமூலம் ஒன்று அவசியம் தேவைப்படுவதால் செப்ரெம்பர் 25 ஆம் திகதி காலை 10 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 2 ஆம் மாடி புதிய செயலக கட்டடம் கொழும்பு 1 என்ற முகவரிக்கு குறித்த ஊடகவியலாளரைதவசீலனை சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.