Sat. May 16th, 2026

உலக வலுதூக்கல் போட்டி யாழ் வீராங்கனைகள் பதக்கங்கள் குவிப்பு

உலக வலுதூக்கல் போட்டியில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மூன்று வீராங்கனைகளும் பதக்கங்களை கைப்பற்றி யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலக வலுதூக்கல் போட்டி கடந்த 17ம் திகதி தாய்லாந்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இதில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆஷிகா விஜயபாஸ்கர் சிரேஷ்ட பிரிவினருக்கான போட்டியில் 80 கிலோ எடைப்பிரிவில் பங்கு பற்றி ஒரு வெள்ளிப்பதக்கமும்  ஒரு வெண்கலபதக்கமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
புளோரிஷ்ரா சிம்சோன் இளையோருக்கான போட்டியில் 58 கிலோ எடைப்பிரிவில் ஒரு தங்கப்பதக்கமும் ஒரு வெண்கலப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஜெகனிகா ஜெஸ்ரின் இளையோருக்கான போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் இரண்டு வெள்ளிப்பதக்கம் பெற்று வெற்றி பெற்று இலங்கைக்கும் யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed