உலக வலுதூக்கல் சென் சார்ள்ஸ் மாணவி இரட்டை தங்கம் வென்று சாதனை
உலக வலுதூக்கல் போட்டியில் யாழ் சென் சாள்ஸ் மகா வித்தியாலய மாணவி இரட்டை தங்கப் பதக்கங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

உலக வலுதூக்கல் போட்டி கடந்த 8ம் திகதி முதல் ஆரம்பமாகி கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட கனிஷ்ட பிரிவினருக்கான வலுதூக்கல் போட்டியில் யாழ் சென். சாள்ஸ் மகா வித்தியாலய மாணவி யூ.எனிட்ரோஸ் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். வடமாகாணத்தில் உலக வலுதூக்கல் போட்டியில் 18 வயதிற்கு உட்பட்ட கனிஷ்டருக்கான பிரிவில் இரண்டு தங்கப்பதக்கங்களை கைப்பற்றியமை இதுவே முதல் தடவையாகும்.