உலக வலுதூக்கல் சம்பியன்சிப் போட்டிக்கு யாழ் வீராங்கனைகள் மூவர் பங்கேற்பு
தாய்லாந்தில் இடம்பெறவுள்ள உலக வலுதூக்கல் சம்பியன்சிப் போட்டிக்கு யாழ் வீராங்கனைகள் மூவர் பங்கேற்கவுள்ளனர்.
12 ஆவது உலகளாவிய வலுதூக்கல் போட்டி இம் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் யாழ் வீராங்கனைகளான. வி.ஆஷிகா, ஜெ.ஜெகனிகா, ச.புளோரிஷ்ரா ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பளுதூக்கல் வீராங்கனைகளான இவர்கள் ஏற்கனவே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
