உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் யாழ் ஸ்புட்ணி விளையாட்டுக் கழகம் வட மாகாண ரீதியாக மாபெரும் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடாத்தியுள்ளது.
இதில் பாடசாலை மாணவர்களுக்கு 13,15,17, 20 வயதுப் பிரிவினருக்கான போட்டிகளாகவும், திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டிகளாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டிகளாகவும் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன் இறுதிப் போட்டிகள் உலக பாரிசவாத தினமாகிய நேற்று (29) யாழ் கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக சத்திர சிகிச்சை பிரிவின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆலோசகர்
பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக
சமூக மற்றும் குடும்ப மருத்துவத் துறை தலைவர் கலாநிதி பெத்திருப்பிள்ளை அமல் தினேஷ் கூங்கே அவர்களும், கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையில் 120 அணிகளும், திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 7 அணிகளும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ஏலம் முறையில் தெரிவு செய்யப்பட்ட 5 அணிகளும் என சுமார் 650ற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.