உலக சதுரங்க போட்டியில் தமிழ் சிறுமி செல்வி உமாகஜன் விஷாலினி
உலக சதுரங்க போட்டியில் உரும்பிராயைச் 7 வயது தமிழ் சிறுமி செல்வி உமாகஜன் விஷாலினி கலந்து கொள்ளவுள்ளார்.
உலக தேசிய மாணவர் படையணி சதுரங்க போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து செல்வி உமாகஜன் விஷாலினி கலந்து கொள்ளவுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற தேசிய ரீதியான சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். இவர் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.