உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தால் மாந்தை கிழக்கில் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தால் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் சிராட்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
50 குடும்பங்களுக்கும் தலா 2000 ரூபாய் பெறுமதியான பொதிகள் வெள்ளாங்குளம் கடற்படைப்படகின் உதவியுடன் கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது. அத்துடன் மாந்தை கிழக்கு சுகாதார பணிமனையினரால் மருந்துப்பொருட்களும் பெண்களுக்கான சுகாதார துவாய்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உணவுப்பொருட்களை விநியோகித்தமை தொடர்பில் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.