Sun. Apr 12th, 2026

உற்பத்தி திறன் மாதிரி கிராமமாக  ராஜ கிராமம்

Clean ஸ்ரீலங்கா தேசிய திடடத்திற்கு இணையாக செயல்படுத்தப்படும் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திடடத்தின் கீழ் மீள கட்டி எழுப்பப்பட இருக்கின்ற ராஜ கிராமத்தின்  செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் திருமதி உமாமகள்  தலைமையில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்திற்கான பெயர் பலகையினை யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி.
மாகாண clean ஸ்ரீலங்கா ஒருங்கிணைப்பாளர் கபிலன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் லவன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நிரோஷன்,  கரவெட்டி பிரதேச வைத்தியாசலை பொறுப்பதிகாரி வே. கமலநாதன், உதவி  யாழ்ப்பாணம் மாவட்ட செயலர்,  மற்றும் மேலதிக யாழ்ப்பாணம் மாவட்ட செயலர்கள், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக அதிகாரிகள், ராஜ கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ராஜ கிராமம் ரணசிங்க பிரேம தாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய வீடாமப்பு திட்டத்தில் கட்டிக்கொடுக்கபட்டது. அந்த வீடுகள் தற்போது பழுதடைந்துள்ளது. இந் நிலையிலேயே குறித்த ராஜ கிராமம் மீள கட்டியெழுப்பப் படவுள்ளதுடன் கல்வி, பொருளாதாரம்,  சுகாதாரம், உட்பட பல அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளன.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed